சனி, 28 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 6 நவம்பர் 2020 (09:51 IST)

உதயநிதி-மகிழ்திருமேனி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

உதயநிதி-மகிழ்திருமேனி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு!
தளபதி விஜயின் 65வது திரைப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென அவர் உதயநிதியின் படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் மகிழ்திருமேனியின் அடுத்த படம் விஜய் படமா அல்லது உதயநிதி படமா என்ற குழப்பம் இருந்த நிலையில் தற்போது உதயநிதி-மகிழ்திருமேனி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவந்துள்ளது 
 
உதயநிதி நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கவுள்ள படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நிதி அகர்வால் நாயகியாக நடிக்க உள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படத்திற்கு அரோல் கரோலி இசை அமைக்க உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி விட்டதாகவும் மிக விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் உதயநிதி தெரிவித்துள்ளதை அடுத்து உதயநிதி மகிழ்திருமேனி திரைப்படம் உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தத் திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படம் இந்நிறுவனத்தின் பதினான்காவது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது