‘மாஸ்டர்’ படத்தின் சென்சார் சான்றிதழ்: படக்குழுவினர் அதிர்ச்சி!
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் சென்சார் தகவல் சற்றுமுன் வெளிவந்துள்ள நிலையில் அந்த சான்றிதழ் படக்குழுவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது
மாஸ்டர் படத்தை நேற்று இரவு சென்சார் அதிகாரிகள் பார்த்தனர் என்பதும் சற்று முன் அவர்கள் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் படக்குழுவினர் மாஸ்டர் திரைப்படத்துக்கு யு சான்றிதழ் எதிர்பார்ப்பதாகவும் ஒரு சில காட்சிகள் வன்முறை அதிகமாக இருப்பதால் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ்தான் தர முடியும் என சென்சார் அதிகாரிகள் கூறியதாகவும் கூறப்படுகிறது
கடந்த சில வருடங்களாக விஜய்யின் அனைத்து படங்களும் யூ சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் தற்போது மாஸ்டர் படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது தான் படக்குழுவினர்களின் அதிர்ச்சிக்கு காரணம் என்பது குறிப்பிடதக்கது, இருப்பினும் மாஸ்டர் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படம் வசூலில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது