திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2023 (16:15 IST)

தயாரிப்பாளருடன் திருமணமா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா..!

பிரபல தயாரிப்பாளருடன் நடிகை திரிஷாவுக்கு திருமணம் என்று ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் நடிகை திரிஷா சற்றுமுன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
 
  நடிகைகளுக்கு குறித்தும் அவர்களுக்கு திருமணம் குறித்தும் பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் கடந்த சில ஆண்டுகளாக பரவி வருகிறது. 
 
குறிப்பாக நடிகை திரிஷாவுக்கும் மலையாள தயாரிப்பாளர் ஒருவருக்கும் திருமணம் என்று கடந்த சில நாட்கள் வதந்திகள் மிக வேகமாக பரவி வருகிறது. 
 
இந்த நிலையில் நடிகை திரிஷா இது குரூப் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். 
 
அந்த விளக்கத்தில்  நீங்களும் உங்கள் அணியில் உள்ளவர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும். அமைதியாக இருங்கள், தயவுசெய்து வதந்தியை நிறுத்துங்கள் என்று பதிவு செய்துள்ளார். 
 
இதனை அடுத்து திரிஷாவின் திருமணம் குறித்து வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva