1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 22 பிப்ரவரி 2024 (07:47 IST)

சர்ச்சைகளைக் கண்டுகொள்ளாமல் தக் லைஃப் ஷூட்டிங்கில் கவனம் செலுத்தும் த்ரிஷா!

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள கமல் 234 பட டைட்டில் 'தக் லைஃப்'  என்று சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்போடு படத்தின் ப்ரமோஷன் வீடியோவை கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அது வைரல் ஹிட்டானது.

இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இப்போது இந்த படத்தில் மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் மற்றும் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் சைபீரியாவில் இதன் ஷூட்டிங் முதல் கட்டமாக நடந்தது. இதையடுத்து இப்போது இந்த ஷூட்டிங்கில் இருப்பதை த்ரிஷா தன்னுடைய சமூகவலைதளப் பக்கம் மூலமாக தெரிவித்துள்ளார். த்ரிஷாவை பற்றி பிரபல அரசியல்வாதி ஒருவர் தரக்குறைவாக பேசி அது சர்ச்சையான நிலையில் த்ரிஷாவுக்கு ஆதரவு கூடி வருகிறது. இந்நிலையில் இந்த சர்ச்சைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் த்ரிஷா தக் லைஃப் படத்தில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார்.