ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (10:54 IST)

காங்கிரஸ் சின்னத்தில் கமல் கட்சி போட்டியா? 2 இடங்களில் போட்டி என தகவல்..!

Makkal Needhi Maiam
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட வரும் நிலையில் கமல்ஹாசன் கட்சி மட்டும் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்  கட்சி திமுக கூட்டணியில் நேரடியாக போட்டியிடாமல் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் தொகுதிகளில் இரண்டு தொகுதிகளை பெற்று காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இதற்காக கமல் கட்சியின் நிர்வாகிகள் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கிட்டத்தட்ட இந்த பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இட ஒதுக்கீடு பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அதன் பின்னர் அதில் இருந்து எந்தெந்த தொகுதிகளை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கொடுப்பது என்பது குறித்த பேச்சு வார்த்தையை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Siva