கொரோனா இடைவெளி விதிமுறைகளை மீறிய படக்குழுவினர் – கழுவி ஊற்றிய நடிகர்!
மிஷன் இம்பாசிபிள் படக்குழுவினர் சமூக இடைவெளியை பின்பற்றாததால் அவர்களை எச்சரிக்கும் விதமாக டாம் க்ரூஸ் பேசியுள்ள ஆடியோ வெளியாகியுள்ளது.
டாம் க்ரூஸ் நடிக்கும் மிஷன் இம்பாசிபிள் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் மிகப்பெரிய அரங்கு அமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக பலர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் ஹாலிவுட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் சமூக இடைவெளிகளைப் பின்பற்றாமல் அருகருகே அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. இதையடுத்து படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான டாம் க்ருஸ் அவர்களை எச்சரிக்கும் விதமாக ஒரு ஆடியோவை அனுப்ப அது இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
அந்த ஆடியோவில் இதுபோன்ற விதிமீறல்களை நான் பார்க்கக் கூடாது. அப்படி பார்த்தால் உங்கள் வேலை பறிபோகும். நாம்தான் இந்த விதிமுறைகளை உருவாக்கினோம். அது இப்போது எல்லோருக்கும் முன்மாதிரியாக உள்ளது. நமது துறையில் கொரோனாவால் பலர் வேலை இழந்துள்ளனர். ஆனால் நாம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். அதனால் உங்கள் மன்னிப்புகளை எல்லாம் கேட்கும் நிலையில் நான் இல்லை. உங்களுக்காக இந்த படத்தை நிறுத்த முடியாது. என எச்சரிக்கும் விதமாகக் கூறியுள்ளனர்.