1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 10 மார்ச் 2021 (10:48 IST)

அஜித் பட டைட்டிலை பயன்படுத்தி தேர்தல் விழிப்புணர்வு!

அஜித்தின் வலிமை படப்பெயரை தேர்தல் விழிப்புணர்வுக்காக மாவட்ட ஆட்சியர் ஒருவர் பயன்படுத்தியுள்ளார்.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் படத்தயாரிப்பாளரால் வெளியிடப்படவில்லை.

இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் எங்கு சென்றாலும் வலிமை அப்டேட் எனக் கேட்டு தர்மசங்கடமான சூழ்நிலைகளை உருவாக்கினர். அதனால் வலிமை என்ற சொல் சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்கள் இடையேயும் பிரபலமானது. இந்நிலையில் இப்போது வலிமை என்ற சொல்லை தேர்தல் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தியுள்ளார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்.

டிவிட்டரில் ’இதுதான் வலிமை அப்டேட் மக்களே எனக் கூறி தேர்தல் நாளை குறிப்பிட்டுள்ளார். மேலும் ’ஜனநாயகத்தின் வலிமை ஒவ்வொருவரின் ஓட்டிலும் உள்ளது’ எனப் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.