இன்னும் 3 நாட்கள் மட்டுமே வலிமை படப்பிடிப்பு… அப்டேட்டை வெளியிட்ட நடிகர்!
வலிமை படத்தின் படப்பிடிப்பு இன்னும் 3 நாட்கள் மட்டுமே மீதமுள்ளதாக நடிகர் கார்த்திகேயா தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் படத்தயாரிப்பாளரால் வெளியிடப்படவில்லை. இந்த படத்தில் கதாநாயகியாக ஹூமா குரேஷியும் வில்லனாக நடிகர் கார்த்திகேயாவும் நடித்து வருகின்றனர்.
ரசிகர்களின் பல மாத நச்சரிப்புக்குப் பிறகு மே 1 ஆம் தேதி அப்டேட்கள் வெளியாகும் என போனி கபூர் அறிவித்துள்ளார். இந்நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பு இன்னும் 3 நாட்கள் மட்டுமே மீதமுள்ளதாக நடிகர் கார்த்திகேயா தெரிவித்துள்ளார். ஸ்பெயினில் 3 நாட்கள் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட வேண்டும் என்பதால் அந்நாட்டு அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறார்களாம்.