புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 22 ஜூலை 2020 (16:04 IST)

ஷாருக்கான் வீட்டை பிளாஸ்டிக்கால் மூட இதுதான் காரணம் !

ஷாருக் கான் குடும்பத்தினருடன் வசிக்கும் சொகுசு பங்களா, பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடப்பட்டுள்ளதாக சமீபத்தில் ஒரு புகைப்படம் வைரல் ஆனது. இந்நிலையில் இதற்கான காரணம் கூறப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கடந்த 12 ஆம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை கண்டறிந்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

பின்னர், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய், மற்றும் ஆராத்யா ஆகியோர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற செய்தி முதலில் வெளியானது.

பின்னர் சில மணி நேரத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவருக்கும் எடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட பரிசோதனையில் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்து பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இதனை அடுத்து ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து தாய் - மகள் இருவரும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ஷாருக் கான் குடும்பத்தினருடன் வசிக்கும் சொகுசு பங்களா, பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடப்பட்டுள்ளதாகவும்  கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒவ்வொரு வருடமும் ஷாருக்கான வீடு  மழைக்காலத்தின்போது பாதுக்காப்பு நடவடிக்கைக்காக மூடப்படுவது வழக்கம் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் கொரொனா முன்னெச்சரிகை நடவடிக்கையாக இந்த வீடு பிளாஸ்டிக்கால் மூடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.