என் மேல் வெளிச்சம் பாய்ச்சியவர் ’’இவர் தான்’’ – கமல்ஹாசன் உருக்கம்!
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே உச்ச நடிகராக இருப்பவர் உலகநாயகன் கமல்ஹாசன். அவரது தனது டுவிட்டர் பக்கத்தில் என் மேல் வெளிச்சம் பாய்ச்சியவர் ஏவிஎம் மெய்யப்பன் அவர்கள் என மிக உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :
என் மேல் வெளிச்சம் பாய்ச்சி, என் கலையுலகக் கதவுகளைத் திறந்த பன்முகத் திறமையாளரும், பல கனவுகளின் முகவரியுமான AVM தயாரிப்பு நிறுவனத்தின் தந்தை திரு AV.மெய்யப்பன் அவர்களின் பிறந்த தினத்தில் மட்டுமல்ல, என் கலைவாழ்வின் ஒவ்வொரு நாளும் அவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அவரது ரசிகர்கள் இதற்கு லைக்குகள் போட்டு குவித்து வருகின்றனர்.