புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2017 (10:24 IST)

பலூனுடன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த நடிகை இவர்தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடியப்போகிறது. அடுத்த ஞாயிறு இறுதிப் போட்டியாம். அடுத்தமுறை உங்களை இந்த மேடையில்தான் சந்திக்கப் போகிறேன் என்று போட்டியாளர்களுக்குக் கூறினார் கமல். மேலும் அந்த வெற்றி விழாவிற்கு நான்கு பேர் மட்டுமே இருக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

 
இந்நிலையில் போட்டியாளர்கள் கணேஷ், சுஜா ஆகிய இருவரில் யாரை காப்பாற்றுவது என்ற குழப்பத்தில் இருந்த சிநேகன்,  கணேஷூக்கு மதிப்பெண்களைக் கொடுத்தார். அதனால் நேற்று சுஜா எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது 5 பேர் மட்டுமே மீதம்  உள்ளனர்.
 
நேற்றைய நிகழ்ச்சியின் முடிவில் நடிகை ஒருவர் வீட்டுக்குள் நுழைவதைக்காட்டினார்கள். ஆனால் அவரது முகம்  காட்டவில்லை. அவரது கையில் பலூனுடன் உள்ளே வந்தார். அந்த பலூனை பார்த்தால், அதில் பலூன் என்ற எழுத்து உள்ளது.  ஆகவே ஜெய், அஞ்சலி, ஜனனி நடித்துள்ள பலூன் படத்தின் நாயகிகள் இருவரில் ஒருவர்தான் உள்ளே வந்திருக்கலாம் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.