ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 25 மார்ச் 2020 (14:15 IST)

இவர் காவலர் அல்ல.. காவல் தெய்வம் நடிகர் விவேக் வெளியிட்ட வீடியோ!!

இவர் காவலர் அல்ல.. காவல் தெய்வம் நடிகர் விவேக் வெளியிட்ட வீடியோ!!

நடிகரும் சமூக ஆர்வலருமான நடிகர் விவேக், தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இவர் காவலர் அல்ல தெய்வம் என பதிவிட்டுள்ளார்.

சென்னையில் ஊரடங்கை மதிக்காமல் ஊர் சுற்றிய பயணிகளிடம் காவலர் கையெடுத்து கும்பிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நேற்று மாலை முதல் ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ளது. மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

மக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் பலர் கொரோனா குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள் பலர் பைக்கில் ஆளில்லாத ரோட்டில் ரேஸ் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மக்கள் சாலைகளில் நடமாடுவதை தவிர்க்க காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை அண்ணாசாலையில் வண்டிகளில் பயணித்தவர்களை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரசீத் கை எடுத்து கும்பிட்டு, தயவு செய்து தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வராதீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதேபோன்று மற்றொரு பகுதியில் மக்கள் அநாவசியமாக சாலையில்,  வாகனத்தில் செல்வது அதிகரித்துள்ளது. அதனால் சாலை போக்க்குவரத்து காவலர் ஒருவர், அங்கு தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்த மக்களைப் பார்த்து,  கொரோனா முன்னெச்சரிக்கையை முன்னிட்டு, கைகூப்பி யவாறு... உங்க காலை தொட்டுக் கேட்டுக்கிறேன்.  வீட்டிலேயே இருங்கள் என கேட்டுக்கொண்டார். இந்த வீடியோவை நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இவர் காவலர் அல்ல காவல்  தெய்வம் எனக் குறிப்பிட்டுள்ளார்.