செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 மார்ச் 2020 (13:56 IST)

விட்டா ரஜினிய ஊட்டி விட சொல்லுவீங்க – கடுப்பான எஸ்.வி.சேகர்!

சினிமா ஊழியர்களுக்கு நிதியளித்த விவகாரத்தில் ரஜினியை விமர்சித்த கௌதமனுக்கு எஸ்.வி.சேகர் பதிலளித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்டுள்ள சினிமா ஊழியர்களுக்கு உதவி செய்வதற்காக சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நிதி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும் 50 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தார். ரஜினியின் இந்த நிதியுதவி குறித்து விமர்சித்த இயக்குனர் கௌதமன் “ரஜினி 50 லட்சம் கொடுத்ததற்கு பதிலாக மளிகை சாமான்கள் வாங்கி கொடுத்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு ரஜினி ரசிகர்களே ரியாக்‌ஷன் காட்டாத நிலையில் களமிறங்கிய எஸ்.வி.சேகர் ’விட்டால் ரஜினியை சமைத்து ஊட்டி விட சொல்வார்கள் போலிருக்கிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ரஜினியை திட்டி பேசி கௌதமன் பிரபலம் ஆவதற்கு முயற்சிப்பதாகவும், அவரது லட்சியம் நிறைவேறாது என்றும் தெரிவித்துள்ளார்.