அதர்வண வேதத்துல வைரஸை பத்தி … - கலாய் வாங்கிய எஸ்.வி.சேகர்!
கொரோனா வைரஸ் பாதிப்பால் இணையவாசிகள் வீடுகளிலேயே முடங்கியுள்ள சூழலில் எஸ்.வி.சேகரின் பதிவு ஒன்று கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு இருப்பதால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று மாலை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் ” அதர்வண வேதத்தில் உள்ள 'கிருமி சம்ஹார சூக்தம்'. அவசியம் கேளுங்கள். இந்த மந்திர சப்தம் வீட்டில் ஒலிக்கட்டும்.” என்று பதிவிட்டு ஒரு வீடியோவையும் ஷேர் செய்துள்ளார். இது எழுத்தாளர் அருணன் வேதங்கள் குறித்து கேலியாக பதிவிட்டதற்கு பதிலாக எஸ்.வி.சேகர் பதிவிட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள நெட்டிசன்கள் சிலர் கொரோனாவால் கோயிலையே இழுத்து மூடியிருக்கும் நிலையில் மந்திரத்தால் கொரோனாவை ஒழிக்க முடியும் என்பது நம்பும்படியாகவா இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது இந்த விவாதம் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.