இந்த படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவது உறுதி; ஜிகர்தண்டா இயக்குனர்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வசனங்களே இல்லாமல் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் `மெர்குரி' படத்தில் சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தினை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் பென் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளனர்.
பின்னணி இசையின் மூலம் நகரும் இந்த படத்தில் பிரபுதேவா எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அண்மையில் இந்த படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதியன்று வெளியாக இருந்தது.
இந்நிலையில் தமிழ் திரைப்படத்துறையினர் ஸ்டிரைக் நடத்தி வருவதால் மெர்க்குரி படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்ற குழப்பம் நிலவிவருகிறது. ஸ்டிரைக் நீடித்து ஒரு வேளை ஏப்ரல் 13 தேதியன்று படத்தை வெளியிட முடியாமல் போனாலும், ஏப்ரல் 12 ந் தேதி சர்வதேசத் திரைப்பட விழாவில் 'மெர்க்குரி' திரைப்படம் ப்ரீமியர் ஷோவாக திரையிடப்படுவது உறுதி என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.