ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 6 நவம்பர் 2020 (17:21 IST)

’கமல்ஹாசன் 232’ படத்திற்காக லொகேஷனை முடிவு செய்த லோகேஷ்!

உலகநாயகன் கமலஹாசன் நடிக்கயிருக்கும் 232 வது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பதும் இந்த படத்தின் டைட்டில் குறித்த டீசர் அறிவிப்பு நாளை அதாவது கமல் பிறந்த நாள் அன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் இந்த படத்தின் கதையை தற்போது பொள்ளாச்சியில் லோகேஷ் கனகராஜ் எழுதிக் கொண்டு வருவதாகவும் தீபாவளி கழித்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது 
 
மேலும் லோகேஷ் கனகராஜ் தனது உதவியாளர்களுடன் பல இடங்களில் இந்த படத்திற்காக லொகேஷன் பார்த்ததில் இந்த படத்தின் கதைக்கு பொருத்தமான இடமாக தேனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட 60 சதவீத படப்பிடிப்புகள் தேனி பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்படும் என்றும் மீதி படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் இந்த படத்தின் முதல் அறிவிப்பு வெளிவந்த போது ’எவனென்று நினைத்தாய்’ என்ற என்ற ஹேஷ்டேக்குடன் வெளிவந்தது. ஆனால் அதே நேரத்தில் இது இந்த படத்தின் டைட்டில் கிடையாது என்றும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்திற்கு ’எவனென்று நினைத்தாய்’ என்ற டைட்டில் தான் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை டீசரில் உள்ள தேதியின்படி வெளிவரும் என்றும் கூறப்படுகிறது