ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 2 நவம்பர் 2020 (16:51 IST)

பிரபல நடிகருக்காக தேனிலவை ஒத்திவைத்த காஜல் அகர்வால்!

பிரபல நடிகர் ஒருவருக்காக தான் திட்டமிட்டிருந்த தேனிலவை நடிகை காஜல் அகர்வால் ஒத்திவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
நடிகை காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இதனை அடுத்து வெளிநாடு ஒன்றுக்கு தேனிலவு செல்ல காஜல் அகர்வால் திட்டமிட்டிருந்தார் 
 
ஆனால் திடீரென சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சாரியா படத்தின் படப்பிடிப்பில் காஜல் அகர்வால் குறித்த காட்சிகளின் படப்பிடிப்பு இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் படப்பிடிப்புக்கு வர வேண்டும் என்றும் படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர் 
 
இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட காஜல் அகர்வால் திட்டமிட்ட தேனிலவை தள்ளி வைத்துவிட்டு ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் வர முடிவு செய்துள்ளார். சிரஞ்சீவியின் ஆச்சார்யா திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50 சதவீதம் முடிந்துவிட்டது என்பதும் காஜல் அகர்வால் காட்சிகளின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரம் எடுத்து விட்டால் அவருடைய மொத்த காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்பது என்பதும் குறிப்பிடத்தக்கது