ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 19 மே 2020 (09:52 IST)

கோடிகளில் சம்பளம் கேட்ட சிம்பு... உதறிவிட்டு அருண் விஜய்யை ஓகே பண்ண ஹிட் இயக்குனர்!

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட வித்யாசமான கதைகளை தனக்கே உரிய ஸ்டைலில் படமெடுத்து அனைவரையும் ஆச்சர்யப்படவைக்கும் இயக்குனர் மிஸ்கின். தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷமான இவரது படங்கள் ஒவ்வொன்றும் அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட கதைகள்.

துப்பறிவாளன் 2 படத்தை இயக்குவதில் விஷாலுடன் ஏற்பட்ட பிரச்னையால் மனமுடையந்த மிஸ்கின் அந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார். அதையடுத்து தரமான படம் ஒன்றை இயக்கி அனைவரும் வாய் மேல் விரல் வைக்கும் அளவுக்கு சிறப்பான வெற்றியை கொடுக்கவேண்டும் என எண்ணி அடுத்த படத்திற்கான வேலைகள் ஆரம்பித்துள்ளார்.

தனது ஹிட் படங்களுள் ஒன்றான அஞ்சாதே இரண்டாம் பாக கதையை தயார் செய்து தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான சிம்புவை தேடி சென்ற மிஸ்கின் கதை கூறி ஒப்புகொள்ளவைத்தார். ஆனால் கடைசியில் சிம்பு கேட்ட 10 கோடி சம்பளத்தால் மிரண்டு போன மிஸ்கின் அங்கிருந்து எழுந்து வந்து திறமையைய் வைத்துக்கொண்டு சரியான வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் நடிகர் அருண் விஜய்யை ஓகே பண்ணினார். தற்போது மிஸ்கின்,  வில்லன் தேடுதல் வேட்டையில் தீரம் எடுத்துள்ளார். மிஸ்கின் படம் என்றாலே வில்லனுக்கு தனி மவுஸ் என்பது அனைவரும் அறிந்ததே.. லாக்டவுன் முடிந்ததும் அஞ்சாதே–2 படத்திற்கான ஷூட்டிங் அப்டேட் வெளியாகும் என நம்பப்படுகிறது.