ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் பாடல் இன்று வெளியீடு... கவர்ச்சி பாம்பு வரலட்சுமி!
நீயா 2' படத்தில் இருந்து ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் பாடல் இன்று வெளியாக உள்ளது.
எல் சுரேஷ் இயக்கத்தில் ஜெய், வரலட்சுமி, ராய் லட்சுமி, கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்துள்ள படம் நீயா 2. பல ஆண்டுகளுக்கு முன்பு கமல் நடிப்பில் வெளியான நீயா படத்தின் இரண்டாம் பாகம் போல் உருவாகிறது. கொன்றவர்களை பாம்பு பழிவாங்குவதே படத்தின் கதை. வரலட்சுமி தான் பழிவாங்கும் பாம்பு வேடத்தில் நடித்துள்ளார். மூன்று கதாநாயகிகள் இருப்பதால் கவர்ச்சி தூக்கலாகவே இருக்கும் என தெரிகிறது. இப்படத்தில் இருந்து ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் பாடல் இன்று வெளியாகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்ட படக்குழுவினர் இப்பாடலை வெளியிட உள்ளனர்.
ஶ்ரீதர் அருணாசலம் தயாரித்துள்ளார். ஷபீர் இசையமைத்துள்ளார். ஜுன் 28ம் தேதி நீயா 2 ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.