செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 12 ஏப்ரல் 2018 (13:35 IST)

ஸ்ரீரெட்டியின் லீக் லிஸ்ட்டில் சிக்கிய அடுத்த பிரபலம்

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் லீக் லிஸ்ட்டில் பிரபல தெலுங்கு நட்சத்திரங்கள் சிக்கி சின்னாபின்னாமாகி வருகின்றனர். நேற்று ஸ்ரீரெட்டியின் லீக் லிஸ்ட்டில் நடிகர் ராணாவின் லீலைகளை புகைப்படத்துடன் வெளியிட்ட ஸ்ரீரெட்டி இன்றும் ஒரு பிரபலத்தின் பெயரை வெளியிட்டு திடுக்கிட வைத்துள்ளார்.
 
இன்று ஸ்ரீரெட்டியின் லிஸ்ட்டில் சிக்கியவர் பிரபல தெலுங்கு எழுத்தாளர் கோனாவெங்கட். இவர் தன்னை அவருடைய கெஸ்ட் ஹவுசுக்கு வருமாறு கூறியதாகவும், அவ்வாறு வந்தால் ஒரு பிரபல இயக்குனரை அறிமுகம் செய்து அவரது படத்தில் நல்ல கேரக்டர் வாய்ப்பை பெற்று தருவதாகவும் ஸ்ரீரெட்டியிடம் கூறினாராம். அவரது பேச்சை நம்பி கெஸ்ட் ஹவுசுக்கு சென்றதாகவும், அங்கு தான் விரட்டி விரட்டி கோனாவெங்கட்டால் பாலியல் உறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். ஸ்ரீரெட்டியின் இன்றைய லீக் தெலுங்கு திரையுலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
 
ஸ்ரீரெட்டியின் இந்த குற்றச்சாட்டை கோனாவெங்கட் தனது டுவிட்டரில் மறுத்துள்ளார். மேலும் இதுகுறித்து ஸ்ரீரெட்டி மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதைப்பற்றி சற்றும் கவலைப்படாத ஸ்ரீரெட்டி, அடுத்த இரண்டு நாட்களில் இன்னும் இரண்டு பிரபலங்களின் முகமூடியை கிழிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் தெலுங்கு திரையுலகமே ஆடிப்போயுள்ளது.