1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 30 மார்ச் 2018 (18:17 IST)

சுச்சி லீக்ஸ் போய் இப்போ ஸ்ரீ லீக்ஸ் - ஆதாரங்களை வெளியிடும் நடிகை

சினிமா வாய்ப்பிற்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எல்லா சினிமா துறையிலும் இருக்கிறது.

 
பல வருடங்களாக அது பற்றி நடிகைகள் பேசாமல் இருந்தனர். ஆனால், தற்போது துணிச்சலாக தங்களை படுக்கைக்கு அழைத்த சினிமா பிரபலங்கள் பற்றி துணிவாக பேசி வருகின்றனர்.
 
ஒரு வருடத்திற்கு முன்பு பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் நடிகைகள் தொடர்பான அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி, சினிமா வாய்ப்பிற்காக தன்னை மோசம் செய்த சிலரின் முகத்திரையை கிழிப்பேன் எனவும்,  பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் சிலரை மக்கள் முன்பு அம்பலப்படுத்துவேன் எனவும் அவர் கூறியிருந்தார். அவரின் பேட்டி தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


 
இந்நிலையில், தனது முகநூலில் இன்று ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். அதில், லீக் தொடங்கியது எனக் குறிப்பிட்டுள்ளார்.  ஆனால், அந்த புகைப்படத்தில் உள்ள நடிகை யார் எனத் தெரியவில்லை.