திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 9 செப்டம்பர் 2023 (15:05 IST)

''தலைவர் பெயரை தளபதி என்று கூற வேண்டும்'' -மகளிரணி நிர்வாகிக்கு புஸ்ஸி ஆனந்த் அட்வைஸ்

vijay makkal iyakkam
''தலைவர் பெயரை தளபதி என்று கூற வேண்டும்'' என்று மகளிரணி நிர்வாகிக்கு புஸ்ஸி ஆனந்த் அட்வைஸ் செய்தார்.

சென்னை, பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இன்று  நடைபெற்று வரும் மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் வி.ம.இ., பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை வகித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மகளிர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மகளிரணி நிர்வாகி ஒருவர், இந்த நிகழ்ச்சியில் நீங்கள்தான் சொன்னீர்கள்….எங்களிடம் கூறியதை அப்படியே விஜய்யிடம் சொல்லுவோம் என்றீர்கள்…எங்கள் கோரிக்கை விஜய் சாரை சந்திக்க வேண்டும்..முடியுமா? இதுதான்  நாங்கள் கேட்பது….அவர் எப்போதும் எங்கள் உடன் பிறக்காத சகோதரர் தான்….இத மட்டும் கேட்டு சொல்லுங்க சார்…234 தொகுதிகளிலும் செலக்ட் பண்னி வருவாரு...  வரவைப்போம்….. நான் பயங்கர விஜய் ஃபேன் ''என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட புஸ்ஸி ஆனந்த், ''தலைவர் பெயரை தளபதி என்று கூற வேண்டும்'' என்றார்.

அதன்பின்னர் பேசிய மகளிரணி நிர்வாகி, ''
நாங்கள் வேறு பட்டத்திற்கு ஆசைப்பட மாட்டோம். தளபதி என்பது ஒரு ரசிகர் கொடுத்த பட்டம்  அவர் இன்று எல்லோருடைய மனதிலும் இருக்கிறார். எம்ஜி.ஆரின் இடத்தைப் பிடித்துவிட்டார் இளைய தளபதி. என் மகனின் பெயரும் தளபதிதான் .... என் குடும்பத்தின் ஓட்டு விஜய்க்குத்தான்'' என்றார்.