தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வாங்க முன்வராத ஓடிடி நிறுவனங்கள்?
சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இஸ்லாமிய மக்களை தவறாக சித்தரிப்பதாக பல அமைப்புகள் அந்த படத்தை தடை செய்யக் கோரி போராட்டம் நடத்தின. ஆனாலும் படம் பல மாநிலங்களில் வெளியானது. சில மாநிலங்களில் மட்டும் தடை செய்யப்பட்டது.
இந்த படம் ஒரு பக்கம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் மறுபக்கம் உலகம் முழுவதும் 240 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்ததாக படக்குழு சார்பாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் ரிலீஸாகி ஒரு மாதத்துக்கு மேலாகியும் இன்னும் எந்த ஓடிடியிலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இந்த கதையின் சர்ச்சை தன்மை காரணமாக படத்தை வாங்க எந்த ஓடிடி நிறுவனமும் இதுவரை முன்வரவில்லை என சொல்லப்படுகிறது. அதனால் இந்த படத்தை இதுவரை எந்த ஓடிடி நிறுவனம் வாங்கவில்லை என்பது தெரியவருகிறது.