புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 8 ஜூன் 2023 (15:10 IST)

ஆதிபுருஷ் படத்திற்கு 10,000 டிக்கெட் இலவசம்: ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ தயாரிப்பாளர் அறிவிப்பு..!

Adipurush
பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் என்ற திரைப்படம் வரும் 16ஆம் தேதி தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. 
 
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட் படத்திற்கு இணையாக இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. 
 
ரூபாய் 500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களுக்காக 10,000 டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க இருப்பதாக இந்த தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்பட தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தெரிவித்துள்ளார். 
 
மேலும் இது அனைவரும் கொண்டாட வேண்டிய திரைப்படம் என்றும் அனைவரும் இந்த படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான காஷ்மீர் உலகம் முழுவதும் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva