வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 9 ஜூன் 2022 (18:57 IST)

சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்த சின்னத்திரை நடிகை

makesh babu
பிரபல சின்ன்த்திரை நடிகை சைத்ரா ரெட்டி, இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் மாற்று ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

அதனைத் தொடர்ந்து, யாரடி நீ மோகினி என்ற தொடரில் வில்லியாக நடித்தார்.  அதனால் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

தற்போது கயல் என்ற தொடரில் அவர் நடித்து வருகிறார். இவர் நடிகர் அஜித் நடித்த வலிமை என்ற படத்தில் நடித்திருந்தார். இதனால் அனைவருக்கும் பரரீட்சயமானவராக மாறிவிட்டார்.

இந்த நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு கமர்ஷியல் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த விளம்பரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.