ஸ்னூக்கர் விளையாட்டில் வெற்றி பெற்ற பிரபல நடிகர் !
ஸ்னூகர் விளையாட்டில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் நடிகர் ரகுமான்.
மலையாள சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகர் ரகுமான். இவர் ஸ்னூக்கர் விளையாட்டில் ஆர்வம் கொண்டு அதன் கிளம்பில் மெம்பராக உள்ளார்.
இந்த நிலையில், ஆண்டு தோறும் மெட்ராஸ் கிளப் நடத்தி வரும் ஸ்னூக்கர் போட்டி இந்த ஆண்டு நடத்தியது. இதில், நடிகர் ரகுமான் கலந்துகொண்டு சிங்கிள்ஸ் போட்டியில் 3 வது இடமும், டபில்ஸ் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றார்.
அவருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் ரகுமானுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
நடிகர் ரஹ்மான் ஏ.ஆர்.ரஹ்மானின் மைத்துனர் ஆவார்.