வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 5 ஜூன் 2020 (23:23 IST)

பிரபல நடிகர் தன் அறக்கட்டளை மூலம் 17, 723 குடும்பங்களுக்கு உதவி

தெலுங்கு , தமிழ் சினிமாவில் ஏற்கனவே நன்கு அறிமுகமான நடிகர் நடிகர் விஜய் தேவரகொண்டா. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர் தனது அறக்கட்டளை மூலம் உதவி வருகிறார்.

இவருடைய அறக்கட்டளையில் இதுவரை 1.7 கோடியில் சுமார் 17, 723 குடும்பங்கள் உதவி பெற்றுள்ளதாகவும் அவர்களின் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய மற்றும் பொருட்கள் வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

மேலும், விஜய் தேவரகொண்டா அறக்கட்டளையின் மூலம் 8,505 தன்னார்வ தொண்டர்கள் தங்களை இணைத்துக் கொண்டு இதுவரை ரு.1.5 கோடியில் 58,508 குடும்பங்களுக்கு உதவியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.