திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 24 ஜனவரி 2023 (16:31 IST)

மலையேறச் சென்ற பிரபல நடிகரை காணாததால் குடும்பத்தினர் சோகம்!

Actor Julian Sands
அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர்  மலையேற்றம் சென்று வீடு திரும்ப வராததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜூலியன் சாண்ட்ஸ்(65). இவர், இம்மாதம் 13 ஆம் தேதி கலிபோர்னியாவில் உள்ள ச கேப்ரியல் என்ற காட்டுப்பகுதிக்கு தன்   நண்பர்களுடன் மலையேறச் சென்றிருந்தார்.

ஆனால், அவர்கள் காட்டுப்பகுதியில் மலையேறச் சென்று 11 நாட்கள் ஆகியும் இன்னும் வீடு திரும்பாததால்,  அவரது குடும்பத்தினர் இதுகுறித்து, காவல்துறையில் புகாரளித்தனர்.

தற்போது அடர்ந்த வனப்பகுதியில் போலீஸார்  நடிகர் ஜூனியன் சாண்ட்ஸை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.