வெங்கட்பிரபு ராகவா-லாரன்ஸ் இணையும் படம்: இணையத்தில் பரவும் வதந்திகள்
பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று வெங்கட் பிரபுவே தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். எனவே வெங்கட்பிரபுவும் ராகவா லாரன்ஸும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிய உள்ளனர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது
இந்த நிலையில் இந்த ஒரே ஒரு தகவலை மட்டும் வைத்துக்கொண்டு இணையத்தில் ஆளாளுக்கு வதந்திகளை கிளப்பி வருகின்றனர். வெங்கட்பிரபு ஏற்கனவே இயக்க திட்டமிட்டிருந்த மங்காத்தா 2’ படத்தில் தான் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருப்பதாகவும் என்று ஒரு தரப்பினர் வதந்தியை கிளப்பி வருகின்றனர்
இன்னொரு தரப்பினரோ பில்லா 3’ திரைப்படத்தை சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்க திட்டமிட்டிருந்தார் என்றும், தற்போது சிம்புவுக்கும் அவருக்கும் உறவு சரியில்லை என்பதால் சிம்புவுக்கு பதில் ராகவா லாரன்ஸ் நடிக்க ‘பில்லா 3’ படத்தை அவர் இயக்க உள்ளதாகவும் கூறி வருகின்றனர்
ஆனால் இது எதுவுமே உண்மை இல்லை என்றும் வெங்கட்பிரபு ராகவா, லாரன்ஸ் இணையும் திரைப்படம் எந்த படத்தின் ரீமேக்கோ அல்லது அடுத்த பாகமோ இல்லை என்றும் இது ஒரு புதுவிதமான அதிரடி ஆக்ஷன் படம் என்றும் வெங்கட்பிரபு தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளது