வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 2 டிசம்பர் 2023 (21:41 IST)

நடிகர் அவதாரமெடுக்கும் வெற்றிமாறன்

myskin- vijay sethupathy - vetri maran
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன் நடிகராக புதிய அவதாரம் எடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் வெற்றிமாறன். இவர், பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வடசென்னை ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இவர் இயக்கிய விடுதலை படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்பட 2வது பாகத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். அதேசமயம் சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி டிரெயின் என்ற  படத்தில் நடிக்கவுள்ளார்

சமீபத்தில் இப்படத்தின் முதல் லுக் போஸ்டர்  வைரலான நிலையில், கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவுள்ள இப்படம்  இப்பட ஷூட்டிங் அன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் இயக்குனர் வெற்றிமாறன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.