1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 30 நவம்பர் 2023 (09:41 IST)

இனி வில்லனாக நடிக்க மாட்டேன்… விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு!

கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்தியாவில் அதிகளவில் படங்கள் நடித்த நடிகராக அறியப்படுபவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்ததால் தான் விஜய் சேதுபதிக்கு இந்த நிலைமை என்று சொல்லப்படுகிறது. முன்னதாக விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் மற்றும் டிஎஸ்பி ஆகிய திரைப்படங்கள் திரையரங்கில் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பே இல்லாமல் போனது. ஆனால் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் வெற்றி பெற்றன.  கடைசியாக ஜவான் திரைப்படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி இனிமேல் வில்லனாக நடிக்கப் போவதில்லை என முடிவெடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் “வில்லனாக நடிக்கும் போது சில கட்டுப்பாடுகள் உள்ளன. அவர்கள் என் கதாபாத்திரத்தை மிகவும் கட்டுப்படுத்துகிறார்கள். ஹீரோ கதாபாத்திரத்தை முன்னிறுத்துவதற்காக. நான் நடித்த பல காட்சிகள் எடிட்டிங் அறையில் வெட்டி எறியப்பட்டுள்ளன. அதனால் இனிமேல் வில்லனாக நடிக்கப் போவதில்லை” எனக் கூறியுள்ளார்.