1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2023 (08:36 IST)

விஜய் சேதுபதி 51 படத்தின் ஷூட்டிங் நிறைவு… புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு!

விஜய் சேதுபதி நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தை இயக்கி தயாரித்தார் ஆறுமுக குமார். அந்த படம் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இதையடுத்து மீண்டும் அவர் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி. பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இந்தபடம் தொடங்கப்படுவதில் தாமதம் ஆன நிலையில் கடந்த வாரம் மலேசியாவில் வைத்து இந்த படம் தொடங்கி ஷூட்டிங் நடந்தது.

இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன. இந்த படத்தில் விஜய் சேதுபதி சமையல் கலை நிபுணராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மலேசியா வாழ் சமையல் கலைஞராக இந்த படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது சம்மந்தமாக மலேசியாவில் படக்குழுவினர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட, அது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.