வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vm
Last Modified: வியாழன், 17 ஜனவரி 2019 (19:06 IST)

இந்த வயசுல அந்த மாதிரி வாய்ப்பு கிடைச்சா! மெய்சிலிர்க்கும் சிம்ரன்

90களின் இறுதியில் நிலவை கொண்டுவா கட்டிலில் கட்டிவை என கிறங்கடித்த சிம்ரனை பார்த்து சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க என பதில் மெட்டு போட்டார்கள் ரசிகர்கள். அப்படி 15 வருடங்கள் தமிழ் சினிமாவில் டாப் கனவுக்கன்னியாக வலம் வந்தவருக்கு ரஜினியுடன் மட்டும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏக்கத்தோடு ஏங்கி தவித்த சிம்ரனுக்கு, மதுரை கொளுத்தும் வெயிலில் குளிர்விக்க தந்த ஜிகிர்தண்டாவாக ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு பேட்ட படத்தில் கிடைத்தது.
இந்த வயதில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான் என சிம்ரன் ஏக்க பெருமூச்சோடு சொல்லிருக்கிறார். 
 
இருக்காத பின்னே! முதல் இன்னிங்ஸ் போல் இரண்டாவது இன்னிங்ஸ் சிம்ரனுக்கு வெற்றிகரமாக இல்லை. அவர் நடித்த படங்கள் பெரிசாக போனியாகவில்லை. அவரது நடிப்பும் பெரிதாக பேசப்படவில்லை.   இந்நிலையில் தான் அவருக்கு ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் அவருக்கு பெரிதாக காட்சிகள் இல்லாவிட்டாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இது குறித்து சிம்ரன் கூறியிருப்பதாவது,
 
ரஜினி சார் மிகவும் எளிமையான மனிதர். சூப்பர் ஸ்டார் என்ற பந்தாவே இல்லாதவர். அவருடன் சேர்ந்து நடித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தலைவருடன் சேர்ந்து நான் நடித்த முதல் படம் பேட்ட. இது எனக்கு பெரிய விஷயம். என் வயது நடிகைக்கு கிளாமரான கதாபாத்திரம் கிடைப்பது ரொம்ப அபூர்வம்.

சிங்கிள் தாயாக அதுவும் 40களில் இருக்கும் பெண்ணாக நடிக்கும் வாய்ப்பு எல்லாருக்குமே கிடைக்கிறதுல்ல.  ரஜினி சாரோட நடிக்கிற என் முதல் படம் ஸ்பெஷலாக இருக்கணும்ணு  நினைச்சேன். பேட்ட அப்படியே அமைஞ்சுடுச்சு. இதற்காக நான் கார்த்திக் சுப்புராஜுக்கு தான் நன்றி சொல்லணும். என் உடம்பை கவனிக்க தூக்கம் மற்றும் உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வர்றேன். நம்மள பத்தி நாம நல்ல விதமா நினைச்சாலே எல்லாம் சூப்பராக இருக்கும் என்றார்.