தீபாவளிக்கு ஓடிடியில் ரிலீஸாகும் தங்கலான்… இத்தனைக் கோடியை குறைத்துள்ளதா நெட்பிளிக்ஸ்?
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மற்றும் பசுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் உருவாகிய ‘தங்கலான்’ படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் படத்துக்கு விமர்சன ரீதியாக பாராட்டுகள் கிடைத்தாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை தங்கலான் பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. தமிழைப் போலவேதான் மற்ற மொழிகளிலும் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.
படம் ரிலீஸாகி 65 நாட்களைக் கடந்தும் இன்னும் ஓடிடியில் ரிலீஸாகவில்லை. செப்டம்பர் 20 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த படம் வெளியாகும் என சொல்லப்பட்டது. படத்தின் ஓடிடி வெர்ஷனை குறிப்பிட்ட தேதியில் கொடுக்காமல் படக்குழு தாமதப்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாகவும் படத்துக்குக் கிடைத்த கலவையான விமர்சனங்கள் காரணமாகவும் படத்தை பேசிய விலை கொடுத்து வாங்க நெட்பிளிக்ஸ் மறுத்துள்ளது.
இது சம்மந்தமாக தயாரிப்புத் தரப்புக்கும், நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி நெட்பிளிக்ஸ் நிறுவனம் பேசிய தொகையில் இருந்து 12 கோடி ரூபாயைக் குறைத்துக் கொண்டு படத்தை வாங்கியுள்ளதாம். படம் தீபாவளிக்கு நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகும் என சொல்லப்படுகிறது.