திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (14:09 IST)

கைவிட்ட நெட்பிளிக்ஸ்… வேறு ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா தங்கலான்?

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மற்றும் பசுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் உருவாகிய ‘தங்கலான்’ படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் படத்துக்கு விமர்சன ரீதியாக பாராட்டுகள் கிடைத்தாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை தங்கலான் பெறவில்லை என்று சொல்லப்படுகிறது.

படம் ரிலீஸாகி 50 நாட்களைக் கடந்தும் இன்னும் ஓடிடியில் ரிலீஸாகவில்லை. செப்டம்பர் 20 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த படம் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த தேதியில் படம் ரிலீஸாகவில்லை. படத்தை 60 கோடி ரூபாய்க்கு வாங்கியது நெட்பிளிக்ஸ்.

ஆனால் படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் தொகையைக் குறைத்து பேரம் பேச ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக தயாரிப்பாளருக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே ஒத்தக் கருத்து ஏற்படாததால்தான் படம் இன்னும் ஓடிடியில் ரிலீஸாகவில்லை என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் தங்கலான் படத்தை வாங்குவதில் இருந்து விலக, மற்றொரு முன்னணி நிறுவனமான அமேசான் ப்ரைம் படத்தைக் கைப்பற்றியுள்ளதாகவும், விரைவில் அந்த தளத்தில் படம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.