ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 29 நவம்பர் 2023 (20:44 IST)

மாணவர்களுக்கான விஜய் நூலகம் & விஜய் பயிலகம் திறப்பு

vijay makkal iyakkam
நடிகர் விஜய், சினிமாவில் நடித்து வருவதுடன் விரைவில் அரசியலில் களமிறங்க உள்ளதாகவும், இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் மக்கள் இயக்கத்தை பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது.
 
இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினரால் தமிழகம் முழுவதும் விஜய் பயிலகம் தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  சமீபத்தில் வேலூர் மாவட்டம் பொகளூர் ஊராட்சி மற்றும் பல்லாலகுப்பம் ஊராட்சி ஆகிய இடங்களில் விஜய் பயிலகம் திறக்கப்பட்டது. இதற்கு மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எழுந்துள்ளது.
 
இந்த நிலையில்,  தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க,  தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் ஜெயமங்கலத்தில் தளபதிவிஜய்நூலகம் & தளபதிவிஜய்பயிலகம்  திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளதாவது:
 
 
''தேனி மாவட்ட தலைமை தளபதி விஜய்  மக்கள் இயக்கம் சார்பாக மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பெரியகுளம் ஜெயமங்கலத்தில் தளபதிவிஜய்நூலகம் & தளபதிவிஜய்பயிலகம்  திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டது.!
 
மேலும், ''கரூர் மாவட்ட க.பரமத்தி ஒன்றிய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ஆத்தூர் செல்லரபாளயத்தில் #தளபதிவிஜய்பயிலகம் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.!'' என்று தெரிவித்துள்ளது.