புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 13 நவம்பர் 2019 (11:36 IST)

தளபதி 65: விஜய்யை இயக்கும் அடுத்த இயக்குனர் இவரா?

தளபதி 65 படத்தை இயக்குனர் மகிழ் திருமேணி இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. 
 
பிகில் படத்தின் வெற்றியை தொடர்து நடிகர் விஜய், மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 
இந்த படத்தை தொடர்ந்து அடுத்து விஜய்யின் 65வது படத்தை இயக்குவது யார் என்ற தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது. ஆம், தடம் படத்தை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேணி விஜய்யின் 65வது படத்தை இயக்க உள்ளார் என செய்திகள் வெளியாகி வருகின்றன. 
 
இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகத நிலையில் விஜய் ரசிகர்கள் #Thalapathy65 என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.