திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2019 (22:52 IST)

ஒரே மாதத்தில் டிவிக்கு வருகிறது ‘கைதி’

தளபதி விஜய் நடித்த மிக பிரமாண்டமான திரைப்படமான ’பிகில்’ படத்துடன் கார்த்தியின் ’கைதி’ திரைப்படம் வெளியானது. முதல் நான்கு நாட்கள் ’பிகில்’ படத்திற்கு மிக அதிகப்படியான வசூல் கிடைத்தது. கைதி படத்திற்கு 4 நாட்கள் சுமாரான வசூல் கிடைத்தாலும் ஐந்தாவது நாளில் இருந்து நிலைமை தலைகீழ் ஆனது ஒரு கட்டத்தில் ’பிகில்’ படத்தை விட கைதி படத்திற்கு அதிக வசூலும் வர ஆரம்பித்தது 
 
ரூ 27 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கைதி படம் இரு மடங்கு லாபத்தை கொடுத்த நிலையில், ’பிகில்’ திரைப்படமோ போட்ட முதலீடை பெறவே திணறிக் கொண்டிருந்தது என்பதுதான் உண்மையான நிலவரம் ஆக இருந்தது.
 
இந்த நிலையில் அக்டோபர் 25-ஆம் தேதி வெளியான கார்த்தியின் கைதி திரைப்படம் நவம்பர் 25 ஆம் தேதி முதல் ஹாட்ஸ்டார் பிரிமியர் காட்சியாக வெளிவர உள்ளது. திரையரங்குகளில் பார்க்க முடியாதவர்கள் இந்த படத்தை ஹாட்ஸ்டார்-இல் பணம் கட்டி பார்த்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து வெளியான ஒரே மாதத்தில் ஒரு திரைப்படம் டிஜிட்டலில் ஒளிபரப்பாகிறது என்பது ஆச்சரியமான ஒன்றாகும். அதுமட்டுமின்றி தமிழகத்தில் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு படம் டிஜிட்டலில் வெளியாவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது