புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (17:44 IST)

விஜய்க்கு வில்லனாகும் விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா..?

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகரான விஜய் பிகில் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடிக்கவிருக்கிறார். சேவியர் பிரிட்டோ பிலிம் கிரியேட்டர்  நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படம் 2020ம் ஆண்டின் கோடைவிடுமுறை தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 
பிகில் படம் வெளியாவதற்கு முன்னதாகவே அடுத்த படத்தின் அப்டேட் வந்ததால் விஜய் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். மேலும் அடிக்கடி இப்படத்திற்கான ஃபேன் மேட் போஸ்டர்களை தயாரித்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்ட பட நடிகை மாளவிகா மோகன் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்தது.  விக்ரம் வேதா , பேட்ட போன்ற படங்களில் வில்லனாக நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த விஜய் சேதுபதி தற்போது தளபதி 64ல் வில்லனாக நடிக்கவுள்ளார். 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்காக விஜய் சேதுபதி ரூ.10 கோடி சம்பளம் வாங்கவுள்ளதாகவும் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும்  தகவல் கிடைத்துள்ளது.