1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 27 நவம்பர் 2019 (08:53 IST)

விஜய்க்காக தயாராகும் கர்நாடகா மாநில சிறை:

விஜய், மாளவிகா மேனன் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் தற்போது நடைபெற்று நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய இருப்பதாக கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பை கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு முக்கிய சிறைச்சாலையில் நடத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். இதற்கான அனுமதி கர்நாடக மாநில அரசிடமிருந்து பெறப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும் டெல்லியிலிருந்து சென்னை திரும்பியதும் ஓரிரு நாட்கள் ஓய்வு எடுக்கும் படக்குழுவினர் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் கர்நாடக மாநில சிறைச்சாலையில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
கர்நாடக சிறைச்சாலையில் விஜய் நடிக்கும் படம் ஒன்றின் படப்பிடிப்பு நடத்தப்படுவதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை கர்நாடக அரசு செய்து தர ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இந்த படப்பிடிப்பில் விஜய், விஜய்சேதுபதி, அந்தோணி வர்கீஸ் ஆகிய மூவரும் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது
 
விஜய்க்கு ஜோடியாக மாளவிகா நடிக்கும் இந்த படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய்சேதுபதி, அந்தோனி வர்கீஸ், சாந்தனு, சஞ்சீவ், ரம்யா உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை சேவியர் பிரிட்டோ பிரமாண்டமாக பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.