வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 26 நவம்பர் 2019 (22:07 IST)

இன்று உலகத்திலேயே சந்தோஷப்படும் ஆள் நான் தான்: முன்னாள் முதல்வர்

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலகியதை அடுத்து அவரது பதவி விலகல் தான் தன்னுடைய மிகப்பெரிய சந்தோஷம் என்றும் இன்று உலகிலேயே மிக சந்தோசமாக மனிதராக தான் இருப்பதாகவும் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்
 
காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் தலைவர் கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்றது. இந்த ஆட்சியை ஆப்பரேஷன் கமலா என்பதன் மூலம் பாஜக கவிழ்த்தது. 17 காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் திடீரென ஆதரவை வாபஸ் பெற்றதை அடுத்து ஆட்சி கவிழ்ந்தது
 
வாபஸ் பெற்ற எம்எல்ஏக்கள் அனைவரும் மகாராஷ்டிராவில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அப்போது மகாராஷ்டிராவில் முதல்வராக இருந்தவர் தான் இந்த தேவேந்திர பட்னாவிஸ்.
 
இந்த நிலையில் இன்று தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலகியதை கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. உலகத்திலேயே சந்தோசமான மனிதர் இன்று நானாகத்தான் இருப்பேன். அவர்தான் என்னுடைய ஆட்சியை கர்நாடகாவில் கவிழ்ப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்தார். காலம் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்’ என்று பதிவு செய்துள்ளார்.