புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 30 டிசம்பர் 2019 (15:52 IST)

படப்பிடிப்புக்கு பின் வெளிநாட்டில் ஓய்வெடுக்கும் 'தளபதி 64' நாயகிகள்!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் நடித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் சமீபத்தில் தனது காட்சிகளின் படப்பிடிப்பை முடித்த மாளவிகா மோகனன் தான்சானியா நாட்டில் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட விதவிதமான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் தனது காட்சிகளின் படப்பிடிப்பை முடித்த இந்த படத்தின் இன்னொரு நாயகி ஆண்ட்ரியா தற்போது ஆஸ்திரேலியாவில் சென்றுள்ளார். இவரும் தனது சமூக வலைப்பக்கத்தில் ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். மாளவிகா மோகனன் மற்றும் ஆண்ட்ரியா ஆகியவர்கள் பதிவு செய்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.