'மெர்சல்' ஆடியோ விழாவில் 'தல' பெயர் சொன்னதும் எழுந்த கைதட்டல்
இளையதளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' படத்தின் ஆடியோ விழா நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ஒருவர் விஜய் நடித்த படங்கள் குறித்தும் அவை வெளியான தேதி வருடம் குறித்தும் குறிப்பிட்டு கொண்டே வந்தார்.
இந்த நிலையில் தல அஜித்துடன் விஜய் நடித்த படம் 'ராஜாவின் பார்வையிலே' என்று கூறியதும் அரங்கமே சில வினாடிகளில் கைதட்டல் அதிர்ந்தது
விஜய்க்காகவே மட்டுமே நடைபெறும் ஒரு விழாவில் கூட தல பெயருக்கு கிடைத்த கைதட்டல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது