’தல அஜித் ’ படத்திலிருந்து விலகிய ’பிரபல நடிகர் ’ : ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் அவரது நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற வீரம் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப்போவதாக அறிவிப்புகள் வெளியானது.
அதில் ஹிந்தி ஸ்டார் அக்ஷய்குமார் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் நடிகர் அக்ஷய்குமார் அப்படத்தின் ரீமேக்கிலிருந்து விலகியுள்ளதாக தெரிகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த வீரம் திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. ரசிர்கள் மிகவும் கொண்டாடினர் அப்படத்தை.
இதனையடுத்து வீரம் படத்தை ஹிந்தியில் ’லொல்’ என்ற பெயரில் இயக்குநர் பர்கஜ் சாம்ஜி இயக்குகிறார். அஜித் நடித்த ஹீரோ கதாபாத்திரத்துக்கு அக்ஷய்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் கால்ஷீட் தேதி பிரச்சனை காரணமாக அக்ஷய்குமார் அப்படத்தில் இருந்து விலகியுள்ளதாகத் தெரிகிறது.
அக்ஷய்குமாருக்குப் பதிலாக, ஹீரோ வேடத்தில் ராஸி என்ற படத்தில் நடித்த விக்கி கவுஷல் இணைந்துள்ளதகவும் தகவல் வெளியாகிறது.
தற்போது அக்ஷய்குமார் காஞ்சனா ரீமேக்கான லக்ஷ்மி பாம் என்ற படத்தில் நடித்துவருகிறர். இதை ராகவாலாரன்ஸ் இயக்குவது குறிப்பிடத்தக்கது.