1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2019 (07:45 IST)

’ஆர்ட்டிக்கிள் 15’ ரீமேக்கில் தல அஜித்?

தல அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான ’தல 60’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணியை தொடங்கியுள்ள இயக்குனர் வினோத், இம்மாத இறுதியில் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் அஜித் மோட்டார் சைக்கிள் சாம்பியன் ஆக நடித்துள்ளதாகவும், இதுவரை இந்திய திரைப்படங்களில் இல்லாத அளவில் மோட்டார் சைக்கிள் ரேஸ் காட்சிகள் இந்த படத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அஜித்தின் படம் ஒன்று தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்படும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
இந்த நிலையில் ’தல 61’ திரைப்படம் குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. சமீபத்தில் பாலிவுட்டில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற ’ஆர்ட்டிக்கிள் 15’என்ற படத்தின் ரீமேக்கில் தல அஜித் நடிக்க விரும்புவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் உரிமை போனிகபூரிடம் இருப்பதால் அவரே இந்த படத்தை தயாரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும் இந்த படத்தின் உரிமையை பிரபல தமிழ் தயாரிப்பாளர் ஒருவர் பெற்று அஜித்தை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
 
 
இந்த படத்தின் ஹீரோ கேரக்டர் அஜித்தின் இமேஜூக்கு ஏற்ற வகையில் இருப்பதால் இந்த படத்தில் அஜீத் நடிக்க விரும்புவதாகவும் ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் வெற்றியே அடுத்து அவர் இந்த படத்தில் நடிக்க முடிவுஎடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது