1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 14 பிப்ரவரி 2019 (22:23 IST)

அடிமை போல் இருப்பதா? திடீரென மதம் மாறிய தாடி பாலாஜி!

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2 நிகழ்ச்சி மற்ற போட்டியாளர்களுக்கு ஒரு நிகழ்ச்சியாக இருந்த நிலையில் தாடி பாலாஜிக்கு மட்டும் அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனையாக அந்த நிகழ்ச்சி அமைந்தது. கருத்துவேறுபாடுடன் பிரிந்து வாழ்ந்து விவாகரத்து வரை சென்ற தாடி பாலாஜியும் அவருடைய மனைவி நித்யாவும் மீண்டும் இந்த நிகழ்ச்சியால் ஒன்றிணைந்தனர்.
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தாடி பாலாஜி திடீரென இந்து மதத்தில் இருந்து வேறொரு மதத்திற்கு மாறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் தனது தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்பியுள்ளார். 
 
தாய் மதம் திரும்பியது குறித்து தாடி பாலாஜி கூறியபோது, 'நம்முடைய கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றை இழந்து, அடிமை போல் இருக்க வேண்டிய நிலை உருவானதால், தாய் மதம் திரும்பியதாக, தெரிவித்துள்ளார். தாடி பாலாஜியின் இந்த மாற்றத்திற்காக அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.