டீஜே-வுக்கு அடித்த யோகம்: நயன்தாரா படத்தில் வாய்ப்பு!!
டப்ஸ்மாஷ், காமெடி யூ ட்யூப் சேனல்களில் கலக்கியவர்கள் தப்போது சினிமாவிலும் அறிமுகமாவதை பார்க்கிறோம். தற்போது அந்த லிஸ்டில் டீஜேவும் இணைந்துள்ளார்.
சொந்தமாக பாடல் எழுதி பல பாடல்களை பாடி ஆல்பமாக்கியவர் டீஜே. இவரின் முட்டு முட்டு என்ன முட்டு..., எனக்கொரு ஆசை... போன்ற பாடல்கள் யூ ட்யூபில் ஹிட்.
இவருக்கு தற்போது நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் இமைக்கா நொடிகள் படத்தில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை டீஜே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், இவர் அம்சனா எனும் தமிழ் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.