விஜய்யின் 'மெர்சலை' முந்தியது நயன்தாராவின் 'அறம்'
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட திரைப்படமான 'அறம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளிவந்தூள்ளது.
இந்த படத்திற்கு அனைவரும் எதிர்பார்த்தது போலவே சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி நயன்தாராவின் நடிப்பு உள்பட படத்தின் மெசேஜ் குறித்தும் சென்சார் அதிகாரிகள் படக்குழுவினர்களை பாராட்டியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 123 நிமிடங்கள் ஆகும். அதாவது 2 மணி நேரங்கள் மற்றும் 3 நிமிடங்கள் மட்டுமே. தீபாவளிக்கு ஒருநாள் முன்னர் அதாவது அக்டோபர் 18ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விஜய்யின் மெர்சல்' திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பதால் 'மெர்சலை' ஒருநாள் 'அறம்' முந்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.