செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018 (19:56 IST)

மீண்டும் தமிழில் டாப்ஸி

பிரபல பாலிவுட் நடிகை டாப்ஸி நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைய உள்ளார்.

 
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் திரைப்படம் தமிழில் அறிமுகமான டாப்ஸி பின்னர் தெலுங்கு பாலிவுட் ஆகிய படங்களில் நடிக்க தொடங்கினார். 
 
பாலிவுட் சினிமாவில் நுழைந்த நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அங்கு பிரபலமானார். பிங்க் திரைப்படம் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். 
 
இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார். ஆர்.எக்ஸ்.100 என்ற தெலுங்கு படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. அதில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.