சிவாகார்த்திகேயன் ரூட் க்ளியரா..? தமன்னா வெய்ட்டிங்
சின்னைத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் மான் கராத்தே படத்தில் ஹன்சிகாவுடன் நடிப்பதே அவர் தகுதிக்கு மீறிய ஒன்றாக பேசப்பட்டது.
ஆனால், இப்போது அவர் நயன்தாரா, சமந்தா என முன்னனி நடிகைகளுடன் நடிக்க துவங்கிவிட்டார். அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தும் விடுகிறது.
இந்நிலையில், நடிகை தமன்னா சிவகார்த்திகேயனுடன் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். முன்பு போல் மார்க்கெட் இல்லாவிட்டாலும், முன்னணி நடிகை அந்தஸ்திலேயே இருக்கிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயனுடன் நடிக்க காத்துக்கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார் தமன்னா. ஆனா, சிவகார்த்திகேயன் இப்போ அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி ரொம்ப பிஸியாக உள்ளார்.